Tuesday, July 27, 2010

அழுகை





அழுகை ஒரு மனிதனின் உன்னதமான,
பாசத்தின் வெளிப்பாடு,


முதல் முறை அழுதேன்,
அமைதியான கருவறையிலிருந்து,
ஆடம்பரமான இந்த உலகை காணும் பொழுது,


இரண்டாம் முறை அழுதேன்,
என் தாகத்திற்கு தேவையான,
தாய்பாலுக்காக,


மூன்றாம் முறை அழுதேன்,
கோவில் திருவிழாவில்,
அசைந்தாடும் ராட்டினதுக்காக,


நான்காம் முறை அழுதேன்,
பள்ளிக்கூடம் பார்த்துவிட்டு,
திரும்பி விட்டுசென்ற என் தாயை பார்த்து,


ஐந்தாம் முறை அழுதேன்,
அக்காவை போல்,
நானும் பேனாவில் எழுத,


ஆறாம் முறை அழுதேன்,
படிக்காமல் ஊர் சுற்றி,
ஊரை சுற்றி வாங்கிய தந்தையின் அடிக்காக,


ஏழாம் முறை அழுதேன்,
கோடிக்கணக்கில் பணம் வாங்கி அழுதான் ஒருவன்,
அதை நூறு ரூபாய் கொடுத்து பார்த்ததுக்காக,


எட்டாம் முறை அழுதேன்,
வறுமையில் வாடி நின்ற,
என் பெற்றோரை பார்த்து,


ஒன்பதாம் முறை அழுதேன்,
வறுமையிலும் என்னை அணைத்து,
அதை துரத்திய என் தந்தைக்காக,


பத்தாம் முறை அழுதேன்,
கணவன் சிறையில் இருக்க,
கட்டுமரமாய் எங்களை கரைசேர்த்த என் தாய்க்காக,


பதினோராம் முறை அழுதேன்,
என் இரண்டாம் தாய்,
அக்காவின் திருமணத்தில்,


பண்ணிரெண்டாம் முறை அழுதேன்,
சொந்தங்கள் என்னை பார்த்து சிரிக்க,
நட்புகளின் கை என் தோலை தட்டி கொடுத்ததுக்காக,


பதிமூன்றாம் முறை அழுதேன்,
என் முகத்தை பார்க்காமல்,
மனதை மட்டும் பார்த்து வந்தவளுக்காக,


பதினான்காம் முறை அழுதேன்,
காமத்தின் வழியில் பார்த்த எனக்கு,
காதலின் ஆழத்தை புரிய வைத்த என்னவளுக்காக,


பதினைந்தாம் முறை அழுதேன்,
தொடர்ந்து வந்து என்னை தூக்கி வளர்த்த சொந்தம்,
இடையில் இடு காடை நோக்கி சென்ற பொழுது,


பதினாறாம் முறை அழுதேன்,
என்னை விட்டு சென்ற என் பெற்றோர்கள்,
என் பிள்ளைகளாக  பிறந்த பொழுது,


பதினேழாம் முறை அழுதேன்,
பல்லு முளைக்கும் முன்னே,
ஓடி வந்து அப்பா என்று அழைக்க,


பதினெட்டாம் முறை அழுதேன்,
பள்ளிப்படிப்பு முடித்து,
பட்டதாரியாய் என் கண்முன்னே,


பத்தொன்பதாம் முறை அழுதேன்,
காதல் என்னும் கடிவாளத்தை போட்டுக்கொண்டு,
படி தாண்டி சென்ற என் மகளுக்காக,


இருபதாம் முறை அழுதேன்,
வாரிசு என்று நினைத்து வந்த மகன்,
நினைக்கும் முன்னே சுவரில் புகைப்படமாய் மாலையுடன்,


இருபத்தியோராம் முறை அழுதேன்,
நினைவில் அல்ல,
என் நினைவுகள் மட்டும்,


இறந்த பின்பு என்னவளுக்காக அவளின் தனிமையை நினைத்து......


அழுகை தொடரும்!!!!  



No comments:

Post a Comment