Wednesday, July 14, 2010

கண்டேன் உன்னை!!!

நீ - நீயா???
நான் - நீயா???
நாம் - நீயா???
நாங்கள் - நீயா???
நாம் எல்லோரும் - நீயா???

உன்னைக்கான நான்,
எங்கே வரவேண்டும்???
எப்படி வரவேண்டும்???
யாரோடு வரவேண்டும்???
எதைக்கொண்டு வரவேண்டும்???

உன்னை கைகாட்டிய பல பேர், ஆனாலும் ஒரே குழப்பம்,
ஒரு இடத்தில் மஞ்சள் உடையோடு,
ஒரு இடத்தில் பச்சை உடையோடு,
ஒரு இடத்தில் வெள்ளை உடையோடு,
ஒரு இடத்தில் ஆடையே இல்லாமல்,

உனக்கு பிடித்த உணவு என்று வைத்தார்கள், அதிலும் ஒரே குழப்பம்,
ஒரு கூட்டம் பருப்பும், நெய்யும் வைத்தனர்,
ஒரு கூட்டம் கடாவெட்டி பொங்கல் வைத்தனர்,
ஒரு கூட்டம் மாட்டு இறைச்சி வைத்தனர்,
ஒரு கூட்டம் பன்றி இறைச்சி வைத்தனர்,

நீ இருக்கும் இடமென்று அழைத்துச்சென்றார்கள், அங்கேயும் ஒரே குழப்பம்,
ஒரு இடத்தில் பாலனாக அமர்ந்திருந்தாய்,
ஒரு இடத்தில் தம்பதிக்கோலத்தில் நின்றிருந்தாய்,
ஒரு இடத்தில் தாடியுடன் சோக நிலை,
ஒரு இடத்தில் சுவரைக்காட்டி நீ என்றனர்,

இத்தனை குழப்பத்தில் உன் பெயரை கேட்க மறந்துவிட்டேன்,
இறுதியில் சொன்னார்கள் - கடவுள் என்று.....

அதன்பின் கண்டேன் உன்னை, எங்கே தெரியுமா???

குஷ்டரோகி கைப்பிடித்து கூட்டிச்சென்ற ஒரு இளைஞனுக்குள்,
உடல் உறுப்புக்களை தானம் செய்ய காத்துக்கிடந்த ஒரு பெண்மணிக்குள்,
தின்பண்டம் வாங்கிட தந்த பணத்தை பிச்சையிட்ட ஒரு மழலையின் சிரிப்பில்,

அட முட்டாள் மனிதர்களே!

நீங்கள் சொன்ன கடவுளை இங்கே காணுங்கள் - என்னைப்போல!!!

No comments:

Post a Comment