Thursday, July 21, 2016

என் காதலே!!!



நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள்,
காரணம் தெரிந்த பின்பும், எப்படி எழுதாமல் இருக்க,
என்னவளுக்கான என் முதல் படைப்பு இதோ!!!

எழுத நினைத்து ஆரம்பித்தேன்,
ஒன்றும் என் கற்பனை கூடத்திற்கு தோன்றவில்லை,

ஆம்  என்னவள் வந்த பிறகு,
அவளுக்கான என் அனைத்து கற்பனையும் தீர்ந்து விட்டதோ என்னவோ!!!

ஆயினும், கிறுக்க நினைக்க..... இதோ!!!


காதல் என்னும் தேடலில் நான் பயணித்த படகில்,
என் மனம் கரை ஒதுங்கியது அவளோடு!!!

தனிமையில், வெறுமையோடு வாழ்க்கை நகர,
இருளில், இயலாமையோடு மனம் கசிய,

நான் யாரென்று என்னை நானே தேட,

அந்த தேடலில் என்னோட கைக்கோர்த்த,
என்னவளின் நெற்றியில் முத்தமிட்டு,
இல்லை இல்லை, என்னோட நடை போட இருக்கும்,
அவளின் பாதத்தில் முத்தமிட்டு

அழகு என்ற வார்த்தையின்,
பொருள் பெற்ற பதுமை,

இலக்கணம் இல்லாத தமிழில் கூட,
இனிக்கும் அவளின் பெயர்,

ரகுமானின் இசை கூட,
தோற்றுப்போகும், என்னவளின் குரல் முன்,

செந்தமிழிலும் இனிக்கும்,
சுந்தர தெலுங்கிலும் இனிக்கும்,
அவள் பேசினால்,

சிரிப்பிலும் குழந்தை,
அழுகையிலும் குழந்தை,

காதல் என்னும் வார்த்தைக்கு,
காமம் கலந்து கதை சொன்னவள்,

தேடிய இடம் எல்லாம் கிடைக்காத என்னை,
கண்டேன் அவள் கண்களில்,

இன்றோ, தெரிந்தே தொலைக்கிறேன்,
என்னை அவளிடம்,

மீண்டும் தேடி செல்ல!!!



சில நேரங்களில்,
மௌனத்தில் கூட,
காதல் உண்டு,
கண்கள் மட்டும் சந்தித்தால்,
ஆனால் தொலைவில் அவள்,
எப்படி சொல்வேன்,
அவளிடம்,
என் காதலை....

ஆயினும், இந்த ஒரு ஜென்மம் போதாது என்று நினைக்கிறேன்,
என் காதல் முழுவதும் சொல்ல!!!












Thursday, February 20, 2014

அம்மா என்று அழைக்க முடியவில்லை என்று !!!

எத்தனை நாட்கள்  காத்திருந்தேன்???
உன் மெல்லிய குரலை கேட்க,

பத்து வருடங்கள் ஓடியது,
பட்டென்று,

பட்டென்று பதறினேன்,
பதினைந்து நொடிகளில் கேட்ட பின்பு.

கேட்டு பழகிய குரல் தான் ,
இருந்தும், ஏதோ ஒரு பதற்றம்!!!

அக்கா என்று அழைப்பதற்குள்,
அரை நிமிடம் அமைதியானேன்,

ஆம், முப்பது நொடிகளில்...
பத்து வருடங்கள் பின்னோக்கி பயணமானது என் மனக்கடிகாரம்,

உன்னை முதன் முதலில் பார்த்து வியந்ததை நினைத்தா?
இல்லை வியந்து நின்ற காரணத்தை நினைத்தா?

பேசி பழகி அறிமுகம் இல்லாத என்னிடம்,
கரிசனம் காட்டிய நோக்கம் என்னவோ?

எத்தனை நிகழ்வுகள்,
எண்ணிலடங்காத ஏக்கங்கள் என்னுள்,

இருந்தும் புரட்டிய பக்கங்களில் எல்லாம் உன் முகம்,
பச்சை குத்தியது போல,

ஆம், போன ஜென்மத்தில் ஏதோ ஒரு,
விட்ட குறை தொட்ட குறை,

ஒன்று, நீ என் தாயாக இருந்திருக்க வேண்டும்,
இல்லை, நீ என் மகளாக இருந்திருக்க வேண்டும்,

அது போகட்டும், ஆயிரம் முறை அக்கா என்று அழைத்தாலும்...

இறைவன் மீது தீராத கோபம் எனக்கு,

அம்மா என்று அழைக்க முடியவில்லை என்று !!!

Saturday, February 11, 2012

"தீ " என்னும் நெடில், என்னவளுக்காக


தமிழ் எழுத்துக்கள் அத்தனையும்,
காதலித்தேன்,
தமிழில் நாட்டம் கொண்டு அல்ல,
என்னவள் தமிழ் ஆசிரியை என்பதற்காக!!!

கிமு முதல் கிபி வரை,
தமிழை ஆராய்ந்தேன்,
தமிழில் நாட்டம் கொண்டு அல்ல,
கிபி யில் என்னவள் இருக்கிறாள் என்று,

என்ன கொடுமை,
என்னவளுக்காக தமிழை நேசித்தேன்,
என்னவள் விட்டு சென்ற பிறகும்,

நேசித்தது தமிழ் மட்டும்,
என் தாய் மொழியாக!!!!!!!


Saturday, December 24, 2011

தொலைபேசி கட்டணம்



தினமும் தொலைபேசியில், 


மணிக்கணக்கில் மருகி,


உரையாடலில் உருகி,


காதலித்தேன், காத்திருந்தேன்,


தவறாமல் வந்தது அவள் அல்ல,


தொலைபேசி கட்டணம்!!!!!

Friday, December 23, 2011

தினம் ஒரு சுனாமி

"என்னங்க என்னையும், குழந்தைகளையும் வெளியில் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, இப்படி தூங்கறீங்களே" - சங்கீதாவின் குரலில் கொஞ்சலும், கோபமும் கலந்தே இருந்தன.


"என்னடி இன்னைக்கு கூட சீக்கிரமே எழுந்து, ம்ம்ம்ம்.... போடி"   - தோய்ந்து போன குரலில் படுக்கையை விட்டு எழுந்தான் ராஜேஷ்.


தூக்க கலக்கத்திலும், நேற்று மனைவியிடம் சொன்னதை நினைத்து பார்த்தான், என்னதான் சோம்பலாக இருந்தாலும், விடுமுறை நாளன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியில் சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து, அவர்களின் சந்தோஷத்தில் சுகம் காண்பதே எல்லா கணவன்மார்களின் ஏக்கம். 


சட்டென்று கிளம்பி, அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் மதிய உணவை முடித்தார்கள். முடித்த கையுடன் திரைப்படம் செல்லலாம் என்று மனைவி சொல்ல, மறுக்க மனம் இல்லாமல், "போலாம்டா செல்லம்" என்று அங்கே ஒரு மூன்று  மணிநேரம் கழித்தார்கள். 


பின்பு வீட்டுக்குத்தான் போகிறோம் என்ற நினைப்பில் ராஜேஷ் இருக்க, சங்கீதா தனக்கே உண்டான பாணியில், "ஏங்க கொஞ்சம் ஷாபிங் போயிட்டு போலாமே என்று இழுக்க" வண்டி நேராக கடைதெருவில் போய்நின்றது.


மாலை 6 மணிக்கு கடைக்கு உள்ளே சென்றவர்கள், இரவு வீட்டின் கதவில் சாவியை நுழைக்க மணி பதினொன்றை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. 


சரி வாங்க எனக்கு செம உடம்பு வலி, நான் தூங்க போறேன் - சங்கீதா சொல்ல.. குழந்தைகள் பாதி தூக்கத்தில் இருக்க. ராஜேஷ் மட்டும் பேனாவையும்,பேப்பரையும் எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே உட்கார்ந்து கணக்கு போட தொடங்கினான்.


ஆம், அன்றைய கடைதெருவில், ராஜேஷின் கிரெடிட் கார்டு அவ்வளவு தேய்ந்ததை எண்ணி, அதன் கணக்கு விவரங்களை பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு மாதம் இவ்வளவு என்று தனது பட்ஜெட்டை முடித்து இரவின் மடியில் உறங்க....


எழுந்திறீங்க, மணி ஏழு. தனது இயந்திர வாழ்க்கைக்கு தயாரானான் ராஜேஷ்.
பரபரப்பான் அலுவலகம், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சம்பளத்தின் முக்கால் பகுதி கிரெடிட் கார்டின் தேய்மான செலவுக்கே போய்க்கொண்டிருந்தது.


மணி ஒன்று, மதிய உணவை காண்டீனில் முடித்து விட்டு, தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான், அன்று ஜப்பானில் சுனாமி தாக்கியதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்க.. ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்டான். 


திடிரென்று ஒரு குரல், ராஜேஷ் சார், "உங்கள மேனேஜர் வர சொன்னார்", சொல்லி விட்டு ஆபீஸ் பாய் போக.


ஆம், ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்ட ராஜேஷ், தனக்காக பரிதாபப்பட்டான். அடுத்த மாத செலவுகளை நினைத்து, ஆம், வேலை பறிபோன சோகத்துடன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல். நிலைக்குலைந்தான். 


ஆம், நண்பர்களே. சுனாமி தினமும் எங்கே ஒரு இளைஞனை தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது,  Recession, financial crisis, economy down இப்படி இன்னும் பல ஆங்கில வார்த்தைகளால் உலாவருகிறது. 


இன்று இது போன்ற சம்பவங்கள் இயற்கையே, அனால் இதை சமாளிக்க அனைவரும் செய்யக்கூடிய விஷயம் முடிந்த அளவு கிரெடிட் கார்டு என்னும் மோகத்தை உதறினால், எறும்பை போல் ஆறு மாதம் அல்ல, ஆறு வருடம் கூட சேமிப்பை வைத்து சுகமாக வாழலாம். 


இந்த வேலை போனா, அடுத்த ரெண்டு மாசத்துல இன்னொரு வேலை கிடைக்காதா என்ன?????!!!!!

Wednesday, December 21, 2011

மறதியில் ஒரு உதவி

மனித சமுதாயத்தில் நடக்கும் ஒரு எதார்த்த சம்பவத்தையும், மனித மறதிகளையும் கதையாக இங்கே தொகுக்கவிருக்கிறேன்...

அது மதுரை ரயில்நிலையம், எப்பொழுதும் கூட்ட நெரிசலில் பயணிகள் அங்கும் இங்கும் அலைந்த படியே காட்சி தரும் மிகவும் பரபரப்பான ரயில்நிலையம். 
ஒரு மதிய நேரம், செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ஒரு ரயிலில் இருந்து பயணிகள் வெளியில் சென்றுக்கொண்டிருந்தனர்.  ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலை மும்மரமாக நடந்துக்கொண்டிருந்த சமயம், அதில் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் மதிய உணவுக்காக வெளியே சென்றுக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு குரல், "தம்பி, ரெண்டு, மூணு அரிசி மூட்டை இருக்கு, கண்ணு மங்களா தெரியுது, தூக்கவும் முடியல தம்பி.... யாராவது கூலி ஆளுங்க இருந்தா வர சொல்லு தம்பி, பணம் கூட குடுத்தறேன்" என்று சொல்ல...

அந்த பொறியாளர்,"அய்யா இங்கயே இருங்க, இங்க யாரும் இருக்க மாட்டாங்க, ரயில் நிலையம் முன்னாடி இருப்பாங்க வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

திடிரென்று ஒரு குரல்,  "என்ன சார் எப்பிடி வேலை எல்லாம் போகுது, எப்ப முடியும்? சீக்கிரம் முடிக்கணும் சார், அடுத்த மாதம் அமைச்சர் வராரு கண்காணிப்பு கேமராவ திறந்துவைக்க..... என்ன புரியுதா என்று சொல்லிவிட்டு போகிறார் அந்த ரயில்வே அதிகாரி.

பொறியாளரின் மனநிலை முற்றிலும் வேலை பற்றியே சிந்திக்க தொடங்க, எப்படி முடிக்கலாம், இன்னும் ஒரு மாத காலத்தில் எப்படியாவது முடிக்கவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் முடியுமா? இல்லை என்றால் நமது பெயர் கெட்டு விடுமே!! அலுவலகத்தில் நமக்கு கெட்ட பெயர் வந்து விடுமே, வீண் பலி சுமக்க வேண்டியதாகிவிடுமே.. ஒரு வேளை வேலை பறிபோய் விட்டால்,என்ன ஆகும்.... ஐயோ," இல்ல என்னால் முடியும், கண்டிப்பாக அடுத்த மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் நுழைக்கிறான். அளவு சாப்பாடு ஒன்று சொல்லி விட்டு, கை கழுவி விட்டு அமைதியாக உட்க்கார்ந்து திட்ட மிடுகிறான் வேலை நிமித்தமாக....

கிட்ட தட்ட, ஒன்றரை மணிநேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது, திடிரென்று அந்த வயதானவரின் ஞாபகம் வருகிறது, என்ன செய்வது என்று தெரியாமல், பாதி சாப்பாட்டில் எழுந்து மிக வேகமாக ரயில் நிலையம் நோக்கி ஓடிவருகிறான். அந்த வயதான முதியவரை அங்கே காணவில்லை, உதவி என்பது தக்க சமயத்தில் கிடைக்கா விட்டால் அந்த உதவிக்கே பயன் இல்லை, தான் அறியாமல் செய்த தவறை நினைத்து நொந்து, ஒரு பத்து நிமிடம், அங்கே இருக்கும் இருக்கையில் அமர்ந்து முதியவர் பற்றி யோசிக்கிறான். அவர் எப்படி போயிருப்பார்? யாராவது உதவி செய்திருப்பார்களா? இல்லை இங்கேயே இருக்கிறாரா என்று சுற்றும், முற்றும் பார்க்கிறான், அவர் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. மிகவும் நொந்து துவண்ட போன மனதுடன் வெளியில் செல்கிறான்.

அப்பொழுது ஒரு குரல்,"கொஞ்சம் நில்லு சாமி, செங்கோட்டை போகணும் சாமி, இந்த ரெண்டு மூட்டைய கொண்டு வந்து குடு, உனக்கு பணம் குடுக்குறேன் என்று அந்த வயதான மூதாட்டி சொல்ல... மிக மன நிறைவுடன் அணைத்து மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு, அந்த மூதாட்டியையும் அழைத்துக்கொண்டு, ஒரு இருக்கையில் அவரை அமரசொல்லி விட்டு, தண்ணீர் பாட்டில் ஒன்று அவரிடம் கொடுத்துவிட்டு வெளியில் வர... பச்சை கோடி பறக்க, ரயில் அதன் இலக்கை நோக்கி பயணிக்க.... இவனும் இலக்கை அடைந்த நிம்மதியுடன் நடை போடுகிறான்....

Thursday, July 21, 2011

காட்சி பொருள்



முகம் தெரியாத மனிதன்,
பழக்கம் இல்லாத மனிதர்கள்,
பார்த்திடாத இடம்,

மெழுகு சிலையை போல்,
காட்சி பொருளாக்கி,
விலை நிர்னைக்கப்பட,

வந்தவனின் இஷ்டம் கேட்டு,
நின்றவளை கஷ்டப்படுத்தி,
ஜீவ சமாதி நடக்க,

மூன்று ஜான் கைற்றில்,
மூன்று நிமிடம் முடிவதற்குள்,
முடிந்து போகும் அவளின் வாழ்க்கை,

நாகரீக வளர்ச்சி தேடி ஓடும் மானிடா,
உனது நாகரீகத்தை சரி செய்துவிட்டு,
தேடு... உனது தேடல் கிடைக்கும்........



Tuesday, May 10, 2011

கீற்றும் காலமும்

கீற்றுவில் கிறுக்க ஒருவன் பிறந்தான் - இறந்த காலம்,

கீற்றுவில் கிறுக்க கிறுக்கிக்கொண்டிருக்கிறான் - நிகழ் காலம்,

கீற்றுவில் தன் கிறுக்கல்களை பதிந்து இவன் கவிஞன் ஆவான் - எதிர் காலம்!!!

பறிகொடுத்தவன்

ஒற்றை ரூபாயை,
பறிகொடுத்த சோகத்தில்,
ஒருவன் - பிணம்....

Saturday, May 7, 2011

கருப்பு நிலா



கருப்பு ஆடைக்கொண்டு,
கருப்பு நிலாவை மூடியது ஏன்,
இருந்தும் பௌர்ணமியாய் மின்னுகிறது,
அவள் கண்கள்,

கண் இமைக்கும் நேரத்தில்,
கடைக்கண்களை காட்டி,
களவாடி போனாலே என்னை,

கலாச்சாரம் என்னும் கைற்றில்,
அடிமாடாய் கட்டுப்பட்டு,
முகம் மூடி நிற்கிறாயே,

உன் ஆசை முகம் பார்க்க,
ஆசையாய் வந்த எனக்காக,
கருப்பு நிலாவின்(உன்) முகம் காட்டுவாயா???