Thursday, February 20, 2014

அம்மா என்று அழைக்க முடியவில்லை என்று !!!

எத்தனை நாட்கள்  காத்திருந்தேன்???
உன் மெல்லிய குரலை கேட்க,

பத்து வருடங்கள் ஓடியது,
பட்டென்று,

பட்டென்று பதறினேன்,
பதினைந்து நொடிகளில் கேட்ட பின்பு.

கேட்டு பழகிய குரல் தான் ,
இருந்தும், ஏதோ ஒரு பதற்றம்!!!

அக்கா என்று அழைப்பதற்குள்,
அரை நிமிடம் அமைதியானேன்,

ஆம், முப்பது நொடிகளில்...
பத்து வருடங்கள் பின்னோக்கி பயணமானது என் மனக்கடிகாரம்,

உன்னை முதன் முதலில் பார்த்து வியந்ததை நினைத்தா?
இல்லை வியந்து நின்ற காரணத்தை நினைத்தா?

பேசி பழகி அறிமுகம் இல்லாத என்னிடம்,
கரிசனம் காட்டிய நோக்கம் என்னவோ?

எத்தனை நிகழ்வுகள்,
எண்ணிலடங்காத ஏக்கங்கள் என்னுள்,

இருந்தும் புரட்டிய பக்கங்களில் எல்லாம் உன் முகம்,
பச்சை குத்தியது போல,

ஆம், போன ஜென்மத்தில் ஏதோ ஒரு,
விட்ட குறை தொட்ட குறை,

ஒன்று, நீ என் தாயாக இருந்திருக்க வேண்டும்,
இல்லை, நீ என் மகளாக இருந்திருக்க வேண்டும்,

அது போகட்டும், ஆயிரம் முறை அக்கா என்று அழைத்தாலும்...

இறைவன் மீது தீராத கோபம் எனக்கு,

அம்மா என்று அழைக்க முடியவில்லை என்று !!!