Monday, August 9, 2010

பெயர் மாற்றப்பட்டுள்ளது

வழிந்தோடும் வாலிப கனவு

இரவு பத்து மணி,

புறம் எங்கும் கருமை சூழ்ந்திருக்க,
கண் இமைகள் கருவிழியை மூட,


மறு நொடி,


அகத்தினுள் கேட்டது காக்கையின் காலை வணக்கம்,
மரக்கிளைகளின் நடுவே சூரியன் எட்டி பார்க்க,

தலை முடியை கோதி காபி கொடுத்தால் என்னவள்,
கொடுத்தவளை கட்டியணைத்து காதல் ரசம் புரிந்த வேளையில்,

மறுபடியும் யாரோ தலையை கோத,
விளித்து பார்த்தால்  அம்மா,
நிஜமான காபியை குடித்து விட்டு தூக்கம் கலைந்தேன்.

சிறிய புன்னகையோடு!!!

துவக்கமே இல்லாத முடிவு

காதல் கடிதங்கள்

வரவேற்ப்பு

Saturday, August 7, 2010

பூங்காவின் இருக்கைகள்

எச்சரிக்கை

சுவடுகள்

சொல்லடி

தனிமை விரும்பி




































இந்த உலகத்தில் விரும்பி தேட ஆயிரம் இருந்தும்,
உன்னை தேடி அலையும் உன் விரும்பி நான்,

அன்றாட வாழ்க்கையில் இருந்து கொஞ்சம்,
புறம் சென்று பார்க்க,
அகத்தினுள் ஆழமாய் சென்றேன்,

சென்ற சிறுது நேரத்தில் நிசப்தம்,
இருண்ட வெளிச்சத்தில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம்,
சல்லடைக்குள் எட்டிப்பார்க்கும் சூரியனின் வெட்க்கப்பார்வை,
கரையும் காகத்தின் சத்தமில்லாத காலை வணக்கம்,
அம்மாவின் கைகள் தலையை கோத,
அப்பாவின் அன்பு அதட்டலுடன் இன்றைய நாள் ஆரம்பம்,

காலை உணவை காகத்திற்கு முன்பு உண்டு,
நகர பேருந்தின் நெருசலில்,
முண்டியடித்து அலுவலகம் சென்று,
எப்பொழுதும் சாட்டையின் கையில்,
பம்பரமாய் சுற்றிவிட்டு,

இரவு வீடு வந்து சேர்ந்து,
சற்று இளைப்பாறி,
இரவு உணவை உண்டபின்,
தூக்கத்திற்கு செல்லும் முன் நாளைய நிகழ்வுகள் கண்முன்,
இன்றைய தூக்கத்தை கெடுக்க, ஐயகோ!!!

பிறப்பிற்கு முன்,
இறப்பிற்கு பின்,
இருக்கும் நீ,
நான் பயணிக்கும் இந்த வாழ்க்கை பயணத்தின் போது,
என்னை சந்திக்க மாட்டாயா???

தனிமை(உன்னை விரும்பும்) விரும்பி!!!

Friday, August 6, 2010

என்றும் அன்புடன்




















என்றும் அன்புடன்.........

ஒவ்வொரு கடிதத்தின் கடைசி வரி,
என் கடிதத்தின் முதல் வரி என்னவளுக்காக,

திருமணம் என்னும் திருநாளில்,
திருத்தேரில் என்னோடு ஏறிய,
என்னவளுக்காக எழுதும் கடிதம்,




அன்புள்ள உயிரே,

நலம் நலம் அறிய ஆவல்,
நான் இங்கு நலம், 
அதுபோல நீயும் நலம் என்று நினைக்கும் உன் அன்பு உள்ளம்,

இதுபோல் காதல் ரசம் கலந்து,
காமத்தின் காரம் உணர்ந்து,
எழுதிய கடிதம் இதோ,.

திருமணத்தின் ஐந்தாவது நாளில்,
பட்டாளம் புறப்பட்ட என்னுள்,
எழுந்த ஏக்கத்தின் வெளிப்பாடு இதோ,

மூன்று நாள் ரயில் பயணத்தில்,
மூன்று ஜென்மம் வீணானது போல் ஒரு தவிப்பு,
அந்த தவிப்பின் வெளிப்பாடு இதோ,

பனிபடர்ந்த மலையில்,
பனி உருகுவது போல,
மனித இரத்தம் உருகும் நேரத்தில் உன் நினைப்பு இதோ,

ஏன் முதல் வரியில் கடைசி வரியை சேர்த்தேன் தெரியுமா???
கடைசி வரி எழுதுவது முன் எங்கே குண்டு என் உடம்பை துலைத்துவிடுமோ என்று???

சேர்த்தேன் என்றும் அன்புடன் என்று.....


இதோ மனைவியின் கடிதம்,

மரியாதைக்குரிய ஜெனரல் அவர்களுக்கு,

போரில் வீரமரணம் அடைந்த என் கனவரின் உடலை எங்கள் சொந்த ஊருக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வந்தது அவனின் கடிதமும், அவனும்....

ஆனால் அவன் பிணமாக!!!



Thursday, August 5, 2010

பேருந்தில் ஒரு பெண் சிலை

பேருந்து நிறுத்தம்,
அலை மோதும் கூட்டம்,
என் வழி பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில்,
எதிர் வழி பேருந்து வந்து நிற்க,
சற்றே தலை நிமிர்ந்த என்னை,
கருப்பு புடவையில்,
கருப்பு கூந்தலை கலைத்துவிட்ட மேகம் போல்,
கருப்பு கண்ணாடி அணிந்து கண்முன் நின்றால்,
நெஞ்சில் பதித்தேன் சதி என்னும் சத்தியம் இவள் தான் என்று,


என் வழி மறந்து அவள் வழி போனேன்,
ஒன்று அல்ல, இரண்டு அல்ல,
இரண்டு வருடம் அவள் பின்னால்,
காதலை சொல்ல நாக்கு துடிக்க,
அதை ஏனோ என் நெஞ்சம் மறுக்க,
இறுதியில் அச்சம் தவிர்த்து அவள் முன் சென்றேன்,
பேருந்து படியில் இறங்கிய அவள் தடுமாறி என் கைபிடிக்க,
அதே புன்னகையுடன் கண்ணாடியை கழற்ற அவளின் இரு மீன்களோ இல்லை,


இருந்தும் மாலையிட்டேன் கண்கள் இல்லாத என் கருப்பு சிலைக்கு!!!

கால் தடம்

கால் தடம் நோக்கி ஏக்கத்தில் ஒரு ஏழை சிறுவன் வெளியே,
வருவான் என்று எதிர்நோக்கும் ஒரு கூட்டம் உள்ளே,
உணவு மட்டும் தனியே யாருக்கு காத்திருக்கிறது???
கிருஷ்ணா ஜெயந்தி என்னும் நாளில் ஒரு கிறுக்குத்தனம்.....

முதிர்க்கன்னி

முதிர்க்கன்னி,
விலைபேசினார்கள்,
வாங்க அல்ல விற்க,
ஆனால் விலைபோனது என்னவோ அவளின் மானம்,
கரைந்துஒடியது என்னவோ அவள் கண்ணீர்,
காரணம் முதிர்ந்து விடாத கன்னியின் முதுமையின் வயது....

Sunday, August 1, 2010

வாழ்த்துக்கள்



இதோ ஒரு புதிய பயணம் இனிதே ஆரம்பிக்கும் நேரம்,
இந்த பொன்னான தருணத்தில்,
என் நண்பனுக்கான,
என் கிறுக்கல்கள்,
கீழே,

திருமணம் என்னும் இந்த நாள்,
உன் வாழ்வில் ஒரு பொன்னால்,
திருவும், மதியும் சேரும்,
ஒரு இனிய நாள்,

வாழ்ந்த வாழ்கையை துலைத்து,
வாழப்போகும் வாழ்கையை தேடி,
வாழ வந்தவளின் கைப்பிடிக்கும்,
ஒரு நன்னாள்,

காதலின் மிருதுவை வருடிய உனக்கு,
கல்யாணத்தின் நெருடலையும் வருடும்,
நேரம் வந்துவிட்டது,

காமத்தில் லயித்து,
காதலை துறந்து,
வாழ்கையின் நிஜத்தை மறந்துவிடாதே,

தாம்பத்யம் என்னும் கதவை,
திறக்கும்பொழுது விட்டுக்கொடுத்தல்,
என்னும் சாவியை மறந்துவிடாதே,

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
மெட்டி ஒலியை கேட்க, பிள்ளைகளின் சத்தமும் கேட்க,
ஆரம்பிக்கும் இந்த நாளில் என் மனமார வாழ்த்துக்கள், 

நேற்றைய நினைவுகள் மனதில் ரணங்களாய்,
இன்றைய நிகழ்வுகள் கண்களில் நீராய்,
நாளைய வருகைகள் இனிதே நடக்க,

உன்னவளுடன் என்றும் நீ!!!


என்றும் உன் மகிழ்ச்சியை எதிர்நோக்கும்,
கோவை ராக்கர்ஸ் நண்பர்கள்!!!

சுதந்திரம்



சுதந்திரம்,
எதற்காக வாங்கினோம்???
அதன் நோக்கம் என்ன???
இதோ ஒரு சிறிய கண்ணோட்டம்.

உயிரை காக்கும் மருத்துவமனையில்,
உடலை மட்டும் பார்க்கும் மருத்துவர்,

பாதுக்காப்பு தரவேண்டிய காவல்நிலையம்,
காலபைரவர்களின் இருப்பிடம்,

கல்வி என்னும் காற்றைக்கூட,
ஜாடியில் அடைத்து பணம் பார்க்கும் ஒரு கூட்டம்,

அரசியல் என்னும் அரிச்சுவடியில்,
சாக்கடை என்னும் சாற்றை கலக்கும் கூட்டம்,

புலம்புவதால் மட்டும் பிரிச்சனை தீர்ந்து விடுமா???
நிச்சயம் இல்லை, இருந்தும் குறை சொல்ல வேண்டிய கட்டாயம் நம்மை
போன்ற மக்களுக்கு, அதுவும் நடுத்தர மக்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஆகஸ்ட் 15, 1947, சுதந்திரம் என்னும் காற்றை சுவாசித்த முதல் நாள் எப்படி என்று நம்மால் அறிய முடியாது, அறியபோவதும் இல்லை.  இருந்தும் அன்றைய இந்தியா எப்படி என்று ஒரு சிறிய ஆராய்ச்சி செய்தால் மிக நன்றாகவே இருக்கும்.

காரணம், சமுதாய வளர்ச்சி என்றே சொல்லலாம், என்னை கேட்டால் வெள்ளையர்களுக்கு நாம் நன்றி சொல்வதே தகும்.  ஆளுமை வர்க்கம் என்று  நினைத்தே இங்கு வந்தாலும், அவனால் முடிந்தவற்றை செய்து விட்டே திரும்பி இருக்கிறான்.

இன்றைய மக்கள் நாம் கொஞ்சமாவது சிந்தித்து செயல்படவேண்டிய நிலை உள்ளது,
நேரு நமக்கு நன்றாக தெரிந்த முகம், கேட்டால் தியாகி.... ஆனால் இந்திய அரசியலை முழுவதுமாக ஏலம் எடுத்த குத்தகைக்காரர் என்றே சொல்லலாம்.. இன்றும் அவரின் வழி தான் வந்துக்கொண்டிருக்கிறது. 

எதற்கு அங்கே எல்லாம் செல்ல வேண்டும், நமது ஊரிலேயே பல குள்ளநரிகள் இருக்கும் போது, இதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது வெள்ளையனின் ஆட்சியே தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது....

இதோ அறுபது வருடங்கள் முன்பு வெள்ளையர்களால் இட்ட சாலைகள் இன்றும் இருக்கிறது நம் ஊரில். இன்றைய சாலைகளின் நிலை உங்களுக்கே நன்றாக தெரியும்.

ஆனால் ஒன்று ஒரு வேலை அந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல பிரிச்சனைகள் இருந்திருக்காது, ஆனால் என்ன அடிமைகள் என்ற பட்டதோடு வாழ்ந்திருப்போம்..

எப்படியோ இந்த வருட சுதந்திரதினமும், ஒரு விடுமுறை கொண்டாட்டமாகவே இருக்கட்டும்.... சுதந்திரம் எதற்கு என்ற கேள்வி தான் எழுகிறது இறுதியில்?????