Friday, August 6, 2010

என்றும் அன்புடன்




















என்றும் அன்புடன்.........

ஒவ்வொரு கடிதத்தின் கடைசி வரி,
என் கடிதத்தின் முதல் வரி என்னவளுக்காக,

திருமணம் என்னும் திருநாளில்,
திருத்தேரில் என்னோடு ஏறிய,
என்னவளுக்காக எழுதும் கடிதம்,




அன்புள்ள உயிரே,

நலம் நலம் அறிய ஆவல்,
நான் இங்கு நலம், 
அதுபோல நீயும் நலம் என்று நினைக்கும் உன் அன்பு உள்ளம்,

இதுபோல் காதல் ரசம் கலந்து,
காமத்தின் காரம் உணர்ந்து,
எழுதிய கடிதம் இதோ,.

திருமணத்தின் ஐந்தாவது நாளில்,
பட்டாளம் புறப்பட்ட என்னுள்,
எழுந்த ஏக்கத்தின் வெளிப்பாடு இதோ,

மூன்று நாள் ரயில் பயணத்தில்,
மூன்று ஜென்மம் வீணானது போல் ஒரு தவிப்பு,
அந்த தவிப்பின் வெளிப்பாடு இதோ,

பனிபடர்ந்த மலையில்,
பனி உருகுவது போல,
மனித இரத்தம் உருகும் நேரத்தில் உன் நினைப்பு இதோ,

ஏன் முதல் வரியில் கடைசி வரியை சேர்த்தேன் தெரியுமா???
கடைசி வரி எழுதுவது முன் எங்கே குண்டு என் உடம்பை துலைத்துவிடுமோ என்று???

சேர்த்தேன் என்றும் அன்புடன் என்று.....


இதோ மனைவியின் கடிதம்,

மரியாதைக்குரிய ஜெனரல் அவர்களுக்கு,

போரில் வீரமரணம் அடைந்த என் கனவரின் உடலை எங்கள் சொந்த ஊருக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வந்தது அவனின் கடிதமும், அவனும்....

ஆனால் அவன் பிணமாக!!!



No comments:

Post a Comment