Tuesday, July 27, 2010

அழுகை





அழுகை ஒரு மனிதனின் உன்னதமான,
பாசத்தின் வெளிப்பாடு,


முதல் முறை அழுதேன்,
அமைதியான கருவறையிலிருந்து,
ஆடம்பரமான இந்த உலகை காணும் பொழுது,


இரண்டாம் முறை அழுதேன்,
என் தாகத்திற்கு தேவையான,
தாய்பாலுக்காக,


மூன்றாம் முறை அழுதேன்,
கோவில் திருவிழாவில்,
அசைந்தாடும் ராட்டினதுக்காக,


நான்காம் முறை அழுதேன்,
பள்ளிக்கூடம் பார்த்துவிட்டு,
திரும்பி விட்டுசென்ற என் தாயை பார்த்து,


ஐந்தாம் முறை அழுதேன்,
அக்காவை போல்,
நானும் பேனாவில் எழுத,


ஆறாம் முறை அழுதேன்,
படிக்காமல் ஊர் சுற்றி,
ஊரை சுற்றி வாங்கிய தந்தையின் அடிக்காக,


ஏழாம் முறை அழுதேன்,
கோடிக்கணக்கில் பணம் வாங்கி அழுதான் ஒருவன்,
அதை நூறு ரூபாய் கொடுத்து பார்த்ததுக்காக,


எட்டாம் முறை அழுதேன்,
வறுமையில் வாடி நின்ற,
என் பெற்றோரை பார்த்து,


ஒன்பதாம் முறை அழுதேன்,
வறுமையிலும் என்னை அணைத்து,
அதை துரத்திய என் தந்தைக்காக,


பத்தாம் முறை அழுதேன்,
கணவன் சிறையில் இருக்க,
கட்டுமரமாய் எங்களை கரைசேர்த்த என் தாய்க்காக,


பதினோராம் முறை அழுதேன்,
என் இரண்டாம் தாய்,
அக்காவின் திருமணத்தில்,


பண்ணிரெண்டாம் முறை அழுதேன்,
சொந்தங்கள் என்னை பார்த்து சிரிக்க,
நட்புகளின் கை என் தோலை தட்டி கொடுத்ததுக்காக,


பதிமூன்றாம் முறை அழுதேன்,
என் முகத்தை பார்க்காமல்,
மனதை மட்டும் பார்த்து வந்தவளுக்காக,


பதினான்காம் முறை அழுதேன்,
காமத்தின் வழியில் பார்த்த எனக்கு,
காதலின் ஆழத்தை புரிய வைத்த என்னவளுக்காக,


பதினைந்தாம் முறை அழுதேன்,
தொடர்ந்து வந்து என்னை தூக்கி வளர்த்த சொந்தம்,
இடையில் இடு காடை நோக்கி சென்ற பொழுது,


பதினாறாம் முறை அழுதேன்,
என்னை விட்டு சென்ற என் பெற்றோர்கள்,
என் பிள்ளைகளாக  பிறந்த பொழுது,


பதினேழாம் முறை அழுதேன்,
பல்லு முளைக்கும் முன்னே,
ஓடி வந்து அப்பா என்று அழைக்க,


பதினெட்டாம் முறை அழுதேன்,
பள்ளிப்படிப்பு முடித்து,
பட்டதாரியாய் என் கண்முன்னே,


பத்தொன்பதாம் முறை அழுதேன்,
காதல் என்னும் கடிவாளத்தை போட்டுக்கொண்டு,
படி தாண்டி சென்ற என் மகளுக்காக,


இருபதாம் முறை அழுதேன்,
வாரிசு என்று நினைத்து வந்த மகன்,
நினைக்கும் முன்னே சுவரில் புகைப்படமாய் மாலையுடன்,


இருபத்தியோராம் முறை அழுதேன்,
நினைவில் அல்ல,
என் நினைவுகள் மட்டும்,


இறந்த பின்பு என்னவளுக்காக அவளின் தனிமையை நினைத்து......


அழுகை தொடரும்!!!!  



Saturday, July 17, 2010

ஆறாவது விரல்

மழை காலம்,
சில்லென்ற பனிக்காற்று,
அறை முழுவதும்,
குளிர் சாதன வசதி,
இருந்தும் வெப்பம்,
தாங்காமல் அழுகிறது நுரையீரல்,
காரணம் ஆறாவது விரல்??? 

பிச்சை

அலங்காரத்தோடு பிச்சை எடுப்பவன் உள்ளே,
மனதார பிச்சை எடுப்பவன் வெளியே,
------ ஒரு கோவில்.

Friday, July 16, 2010

சட்டை சொன்னது

சட்டையின் அழுக்கை,
பொருட்படுத்தாமல் நடந்தேன்,
சட்டை சொன்னது,
அம்மாவின் கையை,
அதிகம் தேய்ந்து போகாமல் பார்த்துக்கொள் என்று..........

Thursday, July 15, 2010

குழப்பம்

உருண்டையாய் ஒரு இடம் - தலை,
கருப்பு நிறத்தில் நூல் - தலைமுடி,
இரண்டு கருப்புநிற கோடுகள் - புருவம்,
இரண்டு கருப்புநிற கோலிகுண்டுகள் - கண்கள்,
இரண்டு துவாரம் கொண்ட ஒரு இடம் - மூக்கு,
சங்கு போன்ற இடம் - கழுத்து,
குச்சிகள் போன்ற உறுப்பு - கைகள்,
ஐந்து சிறிய குச்சிகள் - விரல்கள்,
செதில்கள் - நகங்கள்,
குச்சிகள் இணையும் பகுதி - மார்பு,
பானை போன்ற இடம் - வயிறு,
இரண்டு பெரிய குச்சிகள் - கால்,
ஐந்து சிறிய குச்சிகள் - கால் விரல்கள்,

இப்படி ஒரு உருவம் இருந்தால் அதன் பெயர் மனிதனாம்,

வேற்றுகிரக மனிதனை(நம்மை) ஆராயந்துக்கொண்டிருக்கும்,
ஒரு வேற்றுகிரக மனிதனின் குழப்பம்!!!

Wednesday, July 14, 2010

ஒருமுறை

ஒருமுறை தாயின் வருடல்,
ஒருமுறை தாயின் தாய்ப்பால்,
ஒருமுறை தாயின் கையால் சோறு,
ஒருமுறை தாயின் மடியில் தூக்கம்,
ஒருமுறை தாயின் முத்தம்,
ஒருமுறை தந்தையின் வளர்ப்பு,
ஒருமுறை தந்தையின் அதட்டல்,
ஒருமுறை தந்தையின் தோழ்சாய்தல்,
ஒருமுறை தந்தையின் பெருமை,
ஒருமுறை தந்தையின் முத்தம்,
ஒருமுறை அண்ணனின் வழிகாட்டல்,
ஒருமுறை தம்பியின் பிடிவாதம்,
ஒருமுறை அக்காவின் பாசம்,
ஒருமுறை தங்கையின் அழுகை,
ஒருமுறை நண்பனின் தழுவல்,


ஒருமுறை வேண்டும் என்ற ஒருமுறை ஏக்கத்தில் - ஒரு அனாதை!!!

கண்டேன் உன்னை!!!

நீ - நீயா???
நான் - நீயா???
நாம் - நீயா???
நாங்கள் - நீயா???
நாம் எல்லோரும் - நீயா???

உன்னைக்கான நான்,
எங்கே வரவேண்டும்???
எப்படி வரவேண்டும்???
யாரோடு வரவேண்டும்???
எதைக்கொண்டு வரவேண்டும்???

உன்னை கைகாட்டிய பல பேர், ஆனாலும் ஒரே குழப்பம்,
ஒரு இடத்தில் மஞ்சள் உடையோடு,
ஒரு இடத்தில் பச்சை உடையோடு,
ஒரு இடத்தில் வெள்ளை உடையோடு,
ஒரு இடத்தில் ஆடையே இல்லாமல்,

உனக்கு பிடித்த உணவு என்று வைத்தார்கள், அதிலும் ஒரே குழப்பம்,
ஒரு கூட்டம் பருப்பும், நெய்யும் வைத்தனர்,
ஒரு கூட்டம் கடாவெட்டி பொங்கல் வைத்தனர்,
ஒரு கூட்டம் மாட்டு இறைச்சி வைத்தனர்,
ஒரு கூட்டம் பன்றி இறைச்சி வைத்தனர்,

நீ இருக்கும் இடமென்று அழைத்துச்சென்றார்கள், அங்கேயும் ஒரே குழப்பம்,
ஒரு இடத்தில் பாலனாக அமர்ந்திருந்தாய்,
ஒரு இடத்தில் தம்பதிக்கோலத்தில் நின்றிருந்தாய்,
ஒரு இடத்தில் தாடியுடன் சோக நிலை,
ஒரு இடத்தில் சுவரைக்காட்டி நீ என்றனர்,

இத்தனை குழப்பத்தில் உன் பெயரை கேட்க மறந்துவிட்டேன்,
இறுதியில் சொன்னார்கள் - கடவுள் என்று.....

அதன்பின் கண்டேன் உன்னை, எங்கே தெரியுமா???

குஷ்டரோகி கைப்பிடித்து கூட்டிச்சென்ற ஒரு இளைஞனுக்குள்,
உடல் உறுப்புக்களை தானம் செய்ய காத்துக்கிடந்த ஒரு பெண்மணிக்குள்,
தின்பண்டம் வாங்கிட தந்த பணத்தை பிச்சையிட்ட ஒரு மழலையின் சிரிப்பில்,

அட முட்டாள் மனிதர்களே!

நீங்கள் சொன்ன கடவுளை இங்கே காணுங்கள் - என்னைப்போல!!!

Tuesday, July 13, 2010

குருதி






குருதி,
குருதி,
குருதி,
உனக்கான விலைதான் என்ன???


கங்கையைப்போல் உடம்பெல்லாம்,
ஊடுருவி விளையாடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


சிற்றாறு, பேராறு, எங்க ஊரு வாய்க்காலு,போல 
உடம்பெல்லாம் பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாறு போல,
உடம்பெல்லாம் பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


பத்து நொடி முடியும் முன்னே,
இதயத்த துடிக்க வைக்க பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


பண்ணிரெண்டு ஆரம்பித்து, பண்ணிரெண்டு முடியும் முன்னே,
பண்ணிரெண்டாயிரம் மைல்கள் பயணிக்கும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


என்னோட கண்ணு முன்னே என் நண்பன் அடிப்பட்டு,
என் மடியில் சாய்ந்தப்போ, உசுர மட்டும் களவாடி போன குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


எத்தனையோ சொந்தம் சேர்ந்து வந்து நின்னாலும்,
ரத்த சொந்தம் எங்கேனு??? உன்ன சொல்லி பேசுறோமே குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


உன்ன தேடி ஒரு கூட்டம் ஆஸ்பத்திரியில் காத்துக்கிடக்க,
உன்ன வாங்கி பத்திரமா நடை போடுது இன்னொரு கூட்டம்,


இத்தனையும் பார்த்துக்கிட்டு,
மௌனமா நிக்கிறியே,
உன்னோட பதில கொஞ்சம் சொல்லமாட்டாயா குருதியே???


குருதியின் பதில் :-


என்னை சொல்லி குற்றமில்லை,
உன்னை சொல்லி குற்றமில்லை,
அறிவியலின் அறியாமையும்,
நடைமுறையின் நாடகத்தன்மையும்,
நிஜங்களின் பொய்யுமே,
இதற்கான பதில்.....


புண்ணியம் தேடி ஆலயம் செல்வோர் - ஒரு கூட்டம்,
அந்த ஆலயத்திற்கு நன்கொடை செய்ய - ஒரு கூட்டம்,
கத்தையாக பணத்தை புண்ணியம் தேடி போடும் - ஒரு கூட்டம்,


அட மதிக்கெட்ட மடையர்களே,
கங்கை என்று என்னைக்கூறி,
வாரி இறைக்க மனம் இல்லையா???
வாரி இறைத்து பாரும்,
புண்ணியம் வந்து சேரும்...


எனக்கான விலை - ரத்ததானம்!!!

Monday, July 12, 2010

என் முதல் நாயகன்




கதாநாயகன்,
என் முதல் நாயகன்,
என் தந்தை,


நான் செய்த புண்ணியம்,
நீ என் தந்தையாக,
நீ செய்த பாவம்,
நான் உன் பிள்ளையாக,


மலைகளின் அரசியாம் நீலகிரியில்,
வானுயர்ந்த சோலைகளும்.
தேயிலை தோட்டங்களும்,
இயற்கை கொஞ்சும்,
மலைகளுக்கு நடுவில்,
வறுமையின் வாசத்தோடு,
பிறந்தாயே,


குடும்பத்தின் சுமைதாங்க,
மூத்தவனாய் வந்தாயே,


முட்டி மோதி முறுக்கு வித்து,
பள்ளிக்கூடம் போனாயே,


பாசம் வைக்க அக்கா ஒன்னு,
சண்டை போட தங்கை ஒன்னு,
கேட்டு நடக்க தம்பி ஒன்னு,
நல்லது செய்ய அம்மாவும்னு,
பக்குவமா வளந்தாயே,


பள்ளிப்படிப்ப முடிச்சிவிட்டு,
பட்டயம் படிக்க போனாயே,


தேடி வந்த வேலை வேணாம்னு,
வண்டி ஓட்ட போனாயே,


பாச மலர் தங்கச்சின்னு பாசம் வெச்சு வளத்தாயே,
பாசம்னா என்னென்னு சொல்லி, பாதியிலே போனாலே,


கேட்டு நடக்க தம்பி இருக்கானு, நினைச்சப்போ
கேட்டு நடக்க நீயாருனு கேட்டுட்டானே,


நொந்துபோய் நீ இருந்தவேளையில,
எம்பொண்ண கட்டிக்கோன்னு அக்கா வந்து கேக்கையில,


சந்தோஷமா கட்டிக்கிட்டு,
மலை இறங்கி வந்தாயே,


சித்தப்பானு சொந்தமா நீ நினைச்சு போகயில,
வாடகைய வசூல் பண்ண கூலி ஆளா வெச்சாங்களே,


ஆசைக்கு ஒன்னு,
ஆஸ்திக்கு ஒன்னு, பெத்துக்கிட்டு,


வண்டி வாங்கி ஓட்டலாம்னு,
கடன உடன வாங்கிப்போட்டு,


கஷ்டப்பட்டு ஓட்டும் போது,
அப்பளமா நொருங்கி போக,


இந்த வேலை வேண்டான்னு,
வேற வேலை செய்ய போக,


அந்த வேலை நல்லா போக,
வீடு மேல வீடு கட்டி ராஜபோகமா வாழ்ந்தாயே,


அப்பனும் மகனும் நேருக்கு நேர் பார்த்தா,
தோஷம்னு அறிவாளி ஜோசியக்காரங்க சொன்னப்ப,


நா பாக்க எம்மகன் வளரோணும்,
அவன பாத்தா இந்த உசுரு போகும்னா, போகட்டும்னு சொன்னாயே,


ஆசையோடு தோழுல போட்டு வளத்தாயே,
எம்பாவம் உன்ன சேர,


மறுபடியும் அடிப்பட்டு, மிதிப்பட்டு,
நடுத்தெருவு வந்தாயே,


கல்யாண வயசுல பொண்ணு ஒன்னு,
படிக்க வேண்டிய வயசுல பையன் ஒன்னு,


வேற வலி தெரியாம,
விஷம் குடிக்க்கலாமானு கேட்டையே,


கண்ணு எல்லாம் கண்ணீர்,
இன்னும் கண்ணுல நிக்கிது அந்த சோகநீர்,


சமையல் கட்டுப்பக்கும் போனதில்ல, இருந்தும்
வாழ வலி தேடி சமையல் வேலை செயஞ்சாயே,


விடியக்காலில விடியுமுன்னே  எந்திருச்சு,
 ஊரடங்கும் வரை கண்ணு முழிச்சு பாடுப்பட்டு,


சிறுக சிறுக சேத்திவெச்சு,
சிக்கனமா பொண்ணு கல்யானத்த கணக்கு போட,


சந்தோஷமா முடிஞ்சு போச்சு,
எம்பொண்ணு கல்யாணம்னு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டு,


வாழ்கையில கடந்து வந்த பாதைகள திரும்பி பாத்தா,
மனசுக்குள்ள சாட்டை அடி,
வெளியில சிரிப்பு வெடி,
அட இவ்வளவு  தானான்னு,


வாழ்கையில இத்தணையும் பாத்து விட்டு,
கொஞ்சம் கூட தளராம கம்பீரமா நிக்கிறியே,


உன்ன போல வாழணும்னு மனசுக்குள்ள தோனுதப்பா ,
நீ பட்ட கஷ்டத்த பாத்தா வேண்டாம்னும் தோனுதப்பா,


திரும்பவும் சொல்றேன்,


நான் செய்த புண்ணியம்,
நீ என் தந்தையாக,
நீ செய்த பாவம்,
நான் உன் பிள்ளையாக,



உன்னை போல் ஒருவன் யாரும் இல்லை,
ஒருவன் மட்டும் உன்னை போல் - நான்!!!

என்னைத்தேடி ஒரு பயணம்




நான் யாரென்ற கேள்வி, என்னக்குள்ளே எழுகிறது சில சமயம்,


என் பிறப்பிற்கு அர்த்தம் என்ன???


போன ஜென்மத்து கர்மாவா??? இல்லை,
என் பெற்றொர்களின் சுகத்துக்கு கிடைத்த பரிசா??? இல்லை,
ஒரு நோக்கத்தோடு இறைவன் என்னை படைத்தானா??? இல்லை,
அறிவியலின் அறியாமையா??? இல்லை,
இயற்கையின் நியதியா???


வெறுமனே பிறந்தோம், இறந்தோம் என்று இருக்க நான் என்ன ஈசலா???


என்னை யாரென்று கண்டறிய, நான் கண்டெடுத்த ஒரே வழி - என் எழுத்துக்கள்...


ஆகையால் எழுதப்போகிறேன், 
என்னை முழுமையாக உணரும் வரை எழுதப்போகிறேன்,
எதனால் பிறந்தேன் என்று தெரியும் வரை எழுதப்போகிறேன்,
சாகும் நொடி வரை எழுதப்போகிறேன், பார்க்கலாம் அப்பொழுதாவது அறிவேனா என்று???




அதனால் என்னை பெருமிதமாக எண்ணாதீர்கள்,
நான்----


மகாகவி என்று பெயர் பெற்ற பாரதியும் இல்லை,
புரட்சி கவிஞர் என்று பெயர் பெற்ற பாரதிதாசனும் இல்லை,
மக்கள் கவிஞர் என்று பெயர் பெற்ற பட்டுக்கோட்டையும் இல்லை,
பத்மபூஷன் விருது பெற்ற ஜெயகாந்தனும் இல்லை,
எழுத்து சித்தர் என்று பெயர் பெற்ற பாலகுமாரனும் இல்லை,
கவியரசு கண்ணதாசனும் இல்லை,
கவிப்பேரரசு வைரமுத்துவும் இல்லை,


வெறும் ஜடம், என் தேடல் ஆரம்பமாயிற்று......


தேடல் முடியும்பொழுது சொல்கிறேன்,
வந்து தெரிந்துக்கொள்ளுங்கள் - நான் யாரென்று.....


என்னைத்தேடி - நான்!!!

குந்தியின் குலமகனே




அங்க தேசத்து அரசே,
சூரியனின் சுட்டெறிக்கும் சுடரே,
குந்தியின் குலமகனே,
துரியோதனின் நட்பின் கற்ப்பே,
பாண்டவர்களின் ரத்தமே,
குருக்க்ஷேத்ராவின் கதாநாயகனே,
என் மனதின் வரலாற்று நாயகனே,
வீர வணக்கத்துடன் இதோ உனக்கான என் எழுத்துக்கள்.....


சூரியனின் சுடரோடு மண்ணில் பிறந்தவனே,
குந்தியின் மனதால் கங்கையில் தவழ்ந்தவனே,


தேரோட்டி தூக்கி வளர்த்த திருநிறைசெல்வனே,
தேரோட்டியால் மரணம் என்று தெரியாமல் வளர்ந்தவனே,


கவசகுண்டலம் உன் சொத்து என்று நினைத்தவனே,
முதலிலும், முடிவிலும் சொத்தாய்  இருந்தது அதுதானே,


துரோனாச்சார்யாவின் வெறுப்போடு வெளியில் தள்ளப்பட்டு,
பருஷுராமரின் புகழோடு வித்தைகள் பயின்று,


ஹஸ்தினாபுரத்து அவையில் அங்க தேச அரசனாகி,
துரியோதனின் நட்புக்கு இலக்கணமாக, வெற்றிக்கன்டவனே,


மனைவிகள் இருவருக்கும் மணாளனாக வாழ்ந்தவனே,
ஒண்பது பிள்ளைகளுக்கு வீரத்தை ஊட்டி வளர்த்தவனே,


குந்தியின் சத்தியம் உயிரை பறிக்கும் என்று தெரியாமல்,
விட்டுசென்ற பெற்றவளுக்காக சத்தியம் செய்து தந்தாயே,

குருக்க்ஷேத்ரா ஆரம்பத்தில் கௌரவர்களுக்கு நிழல் தந்தாயே,
பாண்டவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்தும் எதிர்த்து நின்றாயே,


ஒரு மொழிக்கு எப்படி இலக்கணம் தேவையோ,
அது போலத்தான் நட்புக்கு நீ தேவை இலக்கணமாக,


போர் தொடங்கி வீரத்தால் விரட்டியடித்து,
பதினைந்து நாள் பாசத்தோடு பாண்டவர்களை எதிர்த்து,
பதினாறாம் நாள் வீரத்தோடு படைகளுக்கு பொறுப்பேற்று,
பதினேழாம் நாள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு,


உயிர் பிரியாமல் நீ தவிக்க,
நீ செய்த தர்மங்கள் உன்னை காத்திருக்க,
அந்த புண்ணியங்களை பிரித்தெடுக்க,
அந்தன வேடம் புரிந்து வந்தானே - கண்ணன்,


காரியங்கள் ஏதும் அறியாமல்,
சூழ்ச்சிகள் ஏதும் புரியாமல்,
செய்த சத்தியம் காப்பாற்ற,
கவசகுண்டலம் அறுத்து நீ கொடுக்க,


நீதி, நெறி தவறி வெற்றிக்காக அம்பு எய்த,
அர்ஜுனன் முன்னாள்,
மரணத்தை கட்டித்தழுவி மண்ணோடு மண் சாய்ந்தாயே,


விட்டுசென்ற பெற்றவளுக்காக,
பழகிய நட்புக்காக,
செய்த சத்தியம் காப்பாற்ற,
வீரத்தோடு வாழ்ந்த நீ அல்லவா காவிய புதல்வன்,  


உள்ளத்தில் நல்ல உள்ளம்,
உறங்காதென்பது வள்ளுவன் வகுத்ததடா,
உனக்கான சரியான வார்த்தைகள் இதுவே.....


என் நெஞ்சம் நிறைந்த காவிய வரலாற்று நாயகன் கர்ணனுக்கு,
வீர வணக்கத்துடன் - நான்!!!