Sunday, July 11, 2010

தங்கைக்காக என் முதல் படைப்பு






இதோ என் பாசமிகு தங்கைக்காக என் முதல் படைப்பு....


அம்மாவை பற்றி,
அப்பாவை பற்றி,
அக்காவை பற்றி,
நண்பர்களை பற்றி,
காதலை பற்றி,
என்னை காதலித்ததாக சொன்னவளை பற்றி,


எத்தனையோ கவிதைகள் எழுதினேன், காரணம் உண்டு...


ஆனால் இவளை பற்றி எழுத மனம் வரவில்லை, 
காரணம் கவிதையை பற்றி கவிதை எழுத நான் என்ன முட்டாளா???


ஆயினும் எழுதுகிறேன், இல்லை கிறுக்கப்போகிறேன் பேனா மை கொண்டு அல்ல,
எங்கள் பாசத்தையும், நேசத்தையும், பிரிவையும் வைத்து...


சின்ன சின்ன சண்டை,
சின்ன சின்ன கோபம்,
சின்ன சின்ன அழுகை,
சின்ன சின்ன தேம்பல்,
சின்ன சின்ன அதட்டல்,
சின்ன சின்ன முறைப்பு,
சின்ன சின்ன அக்கறை,
சின்ன சின்ன பரிதவிப்பு,
சின்ன சின்ன ஏக்கம்,


இத்தனை முகங்களின் ஒரு உருவம் தான் என் தங்கை,


இத்தனை முகங்கள் காட்டினாலும்,
கடைசியில் - அண்ணா என்மேல கோபமா???
மழலையின் சிரிப்போடு கேட்ப்பாலே,
அது ஒன்று போதுமே இந்த அண்ணனுக்கு, 


கடல் கடந்து இருப்பதால்,
நீ வேறு, நான் வேறா???


இந்த பூமி என்று சுற்றாமல் நிற்கிறதோ, 
அன்று வரை உன்னை பற்றிய என் நினைவுகள் நிற்காது,


அம்மா அடிக்கடி சொல்வார்கள் திருவண்ணாமலை தீபம் பார்க்க போலாம் என்று,
என் தங்கை தீபாவின் முகத்தை விடவா அது பிரகாசமாக ஜொலிக்கப்போகிறது,
நிச்சயம் இல்லை....


மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால், 
அப்பொழுதும் நான் அண்ணனாக, நீ தங்கையாக நம் சண்டைகள் தொடர வேண்டும்.


பார்த்தீர்களா இதனால் தான் சொன்னேன் இவளை பற்றி எழுத மாட்டேன் என்று,
பாருங்கள் நிற்காமல் தொடர்கிறது அவளை பற்றிய என் கிறுக்கல்கள்,


கிறுக்கல்கள் தொடரும்.........

No comments:

Post a Comment