Tuesday, July 13, 2010

குருதி






குருதி,
குருதி,
குருதி,
உனக்கான விலைதான் என்ன???


கங்கையைப்போல் உடம்பெல்லாம்,
ஊடுருவி விளையாடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


சிற்றாறு, பேராறு, எங்க ஊரு வாய்க்காலு,போல 
உடம்பெல்லாம் பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாறு போல,
உடம்பெல்லாம் பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


பத்து நொடி முடியும் முன்னே,
இதயத்த துடிக்க வைக்க பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


பண்ணிரெண்டு ஆரம்பித்து, பண்ணிரெண்டு முடியும் முன்னே,
பண்ணிரெண்டாயிரம் மைல்கள் பயணிக்கும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


என்னோட கண்ணு முன்னே என் நண்பன் அடிப்பட்டு,
என் மடியில் சாய்ந்தப்போ, உசுர மட்டும் களவாடி போன குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


எத்தனையோ சொந்தம் சேர்ந்து வந்து நின்னாலும்,
ரத்த சொந்தம் எங்கேனு??? உன்ன சொல்லி பேசுறோமே குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


உன்ன தேடி ஒரு கூட்டம் ஆஸ்பத்திரியில் காத்துக்கிடக்க,
உன்ன வாங்கி பத்திரமா நடை போடுது இன்னொரு கூட்டம்,


இத்தனையும் பார்த்துக்கிட்டு,
மௌனமா நிக்கிறியே,
உன்னோட பதில கொஞ்சம் சொல்லமாட்டாயா குருதியே???


குருதியின் பதில் :-


என்னை சொல்லி குற்றமில்லை,
உன்னை சொல்லி குற்றமில்லை,
அறிவியலின் அறியாமையும்,
நடைமுறையின் நாடகத்தன்மையும்,
நிஜங்களின் பொய்யுமே,
இதற்கான பதில்.....


புண்ணியம் தேடி ஆலயம் செல்வோர் - ஒரு கூட்டம்,
அந்த ஆலயத்திற்கு நன்கொடை செய்ய - ஒரு கூட்டம்,
கத்தையாக பணத்தை புண்ணியம் தேடி போடும் - ஒரு கூட்டம்,


அட மதிக்கெட்ட மடையர்களே,
கங்கை என்று என்னைக்கூறி,
வாரி இறைக்க மனம் இல்லையா???
வாரி இறைத்து பாரும்,
புண்ணியம் வந்து சேரும்...


எனக்கான விலை - ரத்ததானம்!!!

No comments:

Post a Comment