Monday, July 12, 2010

என் முதல் நாயகன்




கதாநாயகன்,
என் முதல் நாயகன்,
என் தந்தை,


நான் செய்த புண்ணியம்,
நீ என் தந்தையாக,
நீ செய்த பாவம்,
நான் உன் பிள்ளையாக,


மலைகளின் அரசியாம் நீலகிரியில்,
வானுயர்ந்த சோலைகளும்.
தேயிலை தோட்டங்களும்,
இயற்கை கொஞ்சும்,
மலைகளுக்கு நடுவில்,
வறுமையின் வாசத்தோடு,
பிறந்தாயே,


குடும்பத்தின் சுமைதாங்க,
மூத்தவனாய் வந்தாயே,


முட்டி மோதி முறுக்கு வித்து,
பள்ளிக்கூடம் போனாயே,


பாசம் வைக்க அக்கா ஒன்னு,
சண்டை போட தங்கை ஒன்னு,
கேட்டு நடக்க தம்பி ஒன்னு,
நல்லது செய்ய அம்மாவும்னு,
பக்குவமா வளந்தாயே,


பள்ளிப்படிப்ப முடிச்சிவிட்டு,
பட்டயம் படிக்க போனாயே,


தேடி வந்த வேலை வேணாம்னு,
வண்டி ஓட்ட போனாயே,


பாச மலர் தங்கச்சின்னு பாசம் வெச்சு வளத்தாயே,
பாசம்னா என்னென்னு சொல்லி, பாதியிலே போனாலே,


கேட்டு நடக்க தம்பி இருக்கானு, நினைச்சப்போ
கேட்டு நடக்க நீயாருனு கேட்டுட்டானே,


நொந்துபோய் நீ இருந்தவேளையில,
எம்பொண்ண கட்டிக்கோன்னு அக்கா வந்து கேக்கையில,


சந்தோஷமா கட்டிக்கிட்டு,
மலை இறங்கி வந்தாயே,


சித்தப்பானு சொந்தமா நீ நினைச்சு போகயில,
வாடகைய வசூல் பண்ண கூலி ஆளா வெச்சாங்களே,


ஆசைக்கு ஒன்னு,
ஆஸ்திக்கு ஒன்னு, பெத்துக்கிட்டு,


வண்டி வாங்கி ஓட்டலாம்னு,
கடன உடன வாங்கிப்போட்டு,


கஷ்டப்பட்டு ஓட்டும் போது,
அப்பளமா நொருங்கி போக,


இந்த வேலை வேண்டான்னு,
வேற வேலை செய்ய போக,


அந்த வேலை நல்லா போக,
வீடு மேல வீடு கட்டி ராஜபோகமா வாழ்ந்தாயே,


அப்பனும் மகனும் நேருக்கு நேர் பார்த்தா,
தோஷம்னு அறிவாளி ஜோசியக்காரங்க சொன்னப்ப,


நா பாக்க எம்மகன் வளரோணும்,
அவன பாத்தா இந்த உசுரு போகும்னா, போகட்டும்னு சொன்னாயே,


ஆசையோடு தோழுல போட்டு வளத்தாயே,
எம்பாவம் உன்ன சேர,


மறுபடியும் அடிப்பட்டு, மிதிப்பட்டு,
நடுத்தெருவு வந்தாயே,


கல்யாண வயசுல பொண்ணு ஒன்னு,
படிக்க வேண்டிய வயசுல பையன் ஒன்னு,


வேற வலி தெரியாம,
விஷம் குடிக்க்கலாமானு கேட்டையே,


கண்ணு எல்லாம் கண்ணீர்,
இன்னும் கண்ணுல நிக்கிது அந்த சோகநீர்,


சமையல் கட்டுப்பக்கும் போனதில்ல, இருந்தும்
வாழ வலி தேடி சமையல் வேலை செயஞ்சாயே,


விடியக்காலில விடியுமுன்னே  எந்திருச்சு,
 ஊரடங்கும் வரை கண்ணு முழிச்சு பாடுப்பட்டு,


சிறுக சிறுக சேத்திவெச்சு,
சிக்கனமா பொண்ணு கல்யானத்த கணக்கு போட,


சந்தோஷமா முடிஞ்சு போச்சு,
எம்பொண்ணு கல்யாணம்னு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டு,


வாழ்கையில கடந்து வந்த பாதைகள திரும்பி பாத்தா,
மனசுக்குள்ள சாட்டை அடி,
வெளியில சிரிப்பு வெடி,
அட இவ்வளவு  தானான்னு,


வாழ்கையில இத்தணையும் பாத்து விட்டு,
கொஞ்சம் கூட தளராம கம்பீரமா நிக்கிறியே,


உன்ன போல வாழணும்னு மனசுக்குள்ள தோனுதப்பா ,
நீ பட்ட கஷ்டத்த பாத்தா வேண்டாம்னும் தோனுதப்பா,


திரும்பவும் சொல்றேன்,


நான் செய்த புண்ணியம்,
நீ என் தந்தையாக,
நீ செய்த பாவம்,
நான் உன் பிள்ளையாக,



உன்னை போல் ஒருவன் யாரும் இல்லை,
ஒருவன் மட்டும் உன்னை போல் - நான்!!!

No comments:

Post a Comment