Monday, July 12, 2010

கானல் நீரை தேடி




இதை பற்றி எழுத மனம் இல்லை,
ஆயினும் எழுதுகிறேன் மனதில் சிறிய வருத்ததோடு,


வருடம் தோறும் பாடுப்பட்டு,
வேர்வை சிந்த வெள்ளாமை செய்து,
கடைசியில் பயிர் வாடிப்போன கதை தான் எங்களது,


பாலை வன பயணத்தில்,
கானல் நீரை கண்டு ஓடும்,
முட்டாள்களை போலத்தான்,
எங்கள் வாழ்கையும்,


காலை எட்டு மணிமுதல் - Assigned Calls,
காலை பத்து மணிக்கு - coffee 1 cup,
மதியம் ஒரு மணிக்கு - lunch,
மாலை  மூன்று மணிக்கு - tea 1 cup,
பிறகு, இரவு ஒன்பது மணி வரை வேலை,
ஒன்னு சொல்ல மறந்துட்டேன், இதுல down calls வேற,
R1, R2 ஜாஸ்தி ஆகாம பாத்துக்கணும்,
இல்லேனா PLP ல கை வெச்சுருவாங்க,


வேலைனா சும்மா இல்லங்க, சுத்தி சுத்தி அடிப்பாங்க,


மணப்பாறை மாடு கட்டி,
மாயவரம் ஏறு கூட்டி,
வய காட்ட உழுது போடு, செல்ல கண்ணு,


எங்களுக்கு எப்படி தெரியுமா,


PMGT mail check பண்ணி,
CUSTOMER கிட்ட MANDATORY CHECK பண்ணி,
ENGINEER அ arrange பண்ணி,
VSAT அ install பண்ணு செல்ல கண்ணு,


என்னதான் செய்தாலும் புண்ணியம் இல்லாம போச்சுங்க,
கடைசியா கிடைக்கிறது KUDOS நு ஒரு mail தான்,


கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதித்தாலும்,
நாங்க 15% அ தாண்டா மாட்டோம்னு பிடிவாதமா இருக்காங்க எங்க ஆளுங்க,


வானம் பார்த்த பூமியாய் எங்கள் மனது,
மழை பெய்ய நாங்க விடமாட்டோம்னு எங்க ஆளுங்க,


ஆனா ஒண்ணுங்க எங்களுக்கு என்ன பெருமை தெரியுமா,
வெளியில யாரவது கேக்கும் போது,
செயற்கைக்கோள் தொலைதொடர்பு துறையில் வேலைன்னு சொல்லும் போதுதான்...


கானல் நீரை தேடி எங்கள் பயணம் தொடரும்......

1 comment: