Monday, July 12, 2010

என்னைத்தேடி ஒரு பயணம்




நான் யாரென்ற கேள்வி, என்னக்குள்ளே எழுகிறது சில சமயம்,


என் பிறப்பிற்கு அர்த்தம் என்ன???


போன ஜென்மத்து கர்மாவா??? இல்லை,
என் பெற்றொர்களின் சுகத்துக்கு கிடைத்த பரிசா??? இல்லை,
ஒரு நோக்கத்தோடு இறைவன் என்னை படைத்தானா??? இல்லை,
அறிவியலின் அறியாமையா??? இல்லை,
இயற்கையின் நியதியா???


வெறுமனே பிறந்தோம், இறந்தோம் என்று இருக்க நான் என்ன ஈசலா???


என்னை யாரென்று கண்டறிய, நான் கண்டெடுத்த ஒரே வழி - என் எழுத்துக்கள்...


ஆகையால் எழுதப்போகிறேன், 
என்னை முழுமையாக உணரும் வரை எழுதப்போகிறேன்,
எதனால் பிறந்தேன் என்று தெரியும் வரை எழுதப்போகிறேன்,
சாகும் நொடி வரை எழுதப்போகிறேன், பார்க்கலாம் அப்பொழுதாவது அறிவேனா என்று???




அதனால் என்னை பெருமிதமாக எண்ணாதீர்கள்,
நான்----


மகாகவி என்று பெயர் பெற்ற பாரதியும் இல்லை,
புரட்சி கவிஞர் என்று பெயர் பெற்ற பாரதிதாசனும் இல்லை,
மக்கள் கவிஞர் என்று பெயர் பெற்ற பட்டுக்கோட்டையும் இல்லை,
பத்மபூஷன் விருது பெற்ற ஜெயகாந்தனும் இல்லை,
எழுத்து சித்தர் என்று பெயர் பெற்ற பாலகுமாரனும் இல்லை,
கவியரசு கண்ணதாசனும் இல்லை,
கவிப்பேரரசு வைரமுத்துவும் இல்லை,


வெறும் ஜடம், என் தேடல் ஆரம்பமாயிற்று......


தேடல் முடியும்பொழுது சொல்கிறேன்,
வந்து தெரிந்துக்கொள்ளுங்கள் - நான் யாரென்று.....


என்னைத்தேடி - நான்!!!

No comments:

Post a Comment