
ஐந்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றேன்,
ஆசிரியை திட்டினார்,
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றேன்,
தந்தையும், தாயும் வருத்தப்பட்டார்கள்,
பட்டயப்படிப்பில் தோல்வியுற்றேன்,
நண்பர்கள் கடந்து சென்றார்கள்,
வேலை கிடைக்காமல் தோல்வியுற்றேன்,
காதலி விட்டுச்சென்றால்,
கடந்து வந்த பாதையை நினைத்து,
நெஞ்சம் உருகி,
கண்கள் கலங்கி,
தாயின் மடியில்,
தலை சாய்த்தேன்,
என் தலைமுடியை கோதி விட்டு, அவள் சொன்னால் ---
மகனே, நீ பிறக்கும் போதே ஆயிரம் ஆயிரம் உயிரணுக்களை முட்டி, மோதி,
முதலாவதாக என் கருவறையில் குடிபெயர்ந்தவனடா...
உன்னாலா இந்த உலகத்தை வெற்றிக்கான முடியாது என்று,
அன்று யோசித்தேன், இதோ இன்று உங்கள் முன் நானாக நிற்கிறேன்.
அனைவரும் பிறக்கும் போதே, ஜெயித்தவர்கள் தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா
என்ன???
No comments:
Post a Comment