Monday, July 12, 2010

குந்தியின் குலமகனே




அங்க தேசத்து அரசே,
சூரியனின் சுட்டெறிக்கும் சுடரே,
குந்தியின் குலமகனே,
துரியோதனின் நட்பின் கற்ப்பே,
பாண்டவர்களின் ரத்தமே,
குருக்க்ஷேத்ராவின் கதாநாயகனே,
என் மனதின் வரலாற்று நாயகனே,
வீர வணக்கத்துடன் இதோ உனக்கான என் எழுத்துக்கள்.....


சூரியனின் சுடரோடு மண்ணில் பிறந்தவனே,
குந்தியின் மனதால் கங்கையில் தவழ்ந்தவனே,


தேரோட்டி தூக்கி வளர்த்த திருநிறைசெல்வனே,
தேரோட்டியால் மரணம் என்று தெரியாமல் வளர்ந்தவனே,


கவசகுண்டலம் உன் சொத்து என்று நினைத்தவனே,
முதலிலும், முடிவிலும் சொத்தாய்  இருந்தது அதுதானே,


துரோனாச்சார்யாவின் வெறுப்போடு வெளியில் தள்ளப்பட்டு,
பருஷுராமரின் புகழோடு வித்தைகள் பயின்று,


ஹஸ்தினாபுரத்து அவையில் அங்க தேச அரசனாகி,
துரியோதனின் நட்புக்கு இலக்கணமாக, வெற்றிக்கன்டவனே,


மனைவிகள் இருவருக்கும் மணாளனாக வாழ்ந்தவனே,
ஒண்பது பிள்ளைகளுக்கு வீரத்தை ஊட்டி வளர்த்தவனே,


குந்தியின் சத்தியம் உயிரை பறிக்கும் என்று தெரியாமல்,
விட்டுசென்ற பெற்றவளுக்காக சத்தியம் செய்து தந்தாயே,

குருக்க்ஷேத்ரா ஆரம்பத்தில் கௌரவர்களுக்கு நிழல் தந்தாயே,
பாண்டவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்தும் எதிர்த்து நின்றாயே,


ஒரு மொழிக்கு எப்படி இலக்கணம் தேவையோ,
அது போலத்தான் நட்புக்கு நீ தேவை இலக்கணமாக,


போர் தொடங்கி வீரத்தால் விரட்டியடித்து,
பதினைந்து நாள் பாசத்தோடு பாண்டவர்களை எதிர்த்து,
பதினாறாம் நாள் வீரத்தோடு படைகளுக்கு பொறுப்பேற்று,
பதினேழாம் நாள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு,


உயிர் பிரியாமல் நீ தவிக்க,
நீ செய்த தர்மங்கள் உன்னை காத்திருக்க,
அந்த புண்ணியங்களை பிரித்தெடுக்க,
அந்தன வேடம் புரிந்து வந்தானே - கண்ணன்,


காரியங்கள் ஏதும் அறியாமல்,
சூழ்ச்சிகள் ஏதும் புரியாமல்,
செய்த சத்தியம் காப்பாற்ற,
கவசகுண்டலம் அறுத்து நீ கொடுக்க,


நீதி, நெறி தவறி வெற்றிக்காக அம்பு எய்த,
அர்ஜுனன் முன்னாள்,
மரணத்தை கட்டித்தழுவி மண்ணோடு மண் சாய்ந்தாயே,


விட்டுசென்ற பெற்றவளுக்காக,
பழகிய நட்புக்காக,
செய்த சத்தியம் காப்பாற்ற,
வீரத்தோடு வாழ்ந்த நீ அல்லவா காவிய புதல்வன்,  


உள்ளத்தில் நல்ல உள்ளம்,
உறங்காதென்பது வள்ளுவன் வகுத்ததடா,
உனக்கான சரியான வார்த்தைகள் இதுவே.....


என் நெஞ்சம் நிறைந்த காவிய வரலாற்று நாயகன் கர்ணனுக்கு,
வீர வணக்கத்துடன் - நான்!!!

No comments:

Post a Comment