Sunday, July 11, 2010

நண்பன்!!!






நண்பன்!!!


இந்த சொல்லுக்கு அவ்வளவு சக்தியா???


தெரியவில்லையடா உன்னை சந்திக்கும் நொடி வரை,


அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா 


அட இத்தனை உறவுகளும் அடங்கிய ஒரு உருவம் தானடா நீ,


நாம் சந்தித்த அந்த முதல் நாளை மறப்பேனா,
சிறிய புன்னகையோடு கைக்குலிக்கி சேர்ந்தோம்,
அன்று தெரியுமா??? பல சோகங்களில் கைகோர்த்து நிற்ப்போம் என்று,


மூன்று வருடத்தில், இரண்டு வருடம் பிரிந்து சென்றோம்,
பிரிவு உடலுக்கு தான், மனதுக்கு அல்ல என்று சொல்லி ஆறுதல் சொன்னாயே,


கல்லூரியில் நடந்த ஒவ்வொன்றும் நினைவுக்கு வருகிறது,
சோற்றை நீ தூக்கி எரிந்தது,
கல்லுரி கலை விழாக்களில் உன் முருகன் பாடல்,
கல்லுரி முடிந்து தினமும் நம் வித விதமான பயணம் - ஈச்சனாரிக்கு,
புத்தாண்டு நன்னாளில் இனிப்பை உன் முகம் தடவி அதை நான் சுவைத்தது, 


ஐயோ,
மனதில் ஏதும் கவலை இல்லாமல், 
குடும்ப கஷ்டம் தெரியாமல்,
வெகுளியாய் சுற்றி வந்த நாட்கள்,
திரும்ப வருமா???


கல்லுரி முடிந்து,
வேலைக்கு சென்ற நாட்கள்,
நான்கு ரூபாயில் பயணம் செய்தாயே,
தோழ் கொடுக்க யாரும் இல்லாமல்,
தோழ் கொடுக்க நாங்களும் இல்லாமல்,
தோழ் மீது பாரத்தை ஏற்றி குடும்ப சுமை தாங்கினாயே,


கடல் கடந்து நான் சென்ற பொது,
மகனாக இருந்து என் வீட்டு விழாக்களில் கலந்துக்கொண்டாயே,


இன்றோடு நம் உறவு முடிவதில்லை,
அப்படி ஒன்று நடந்தால், இனிமேல் என் இதயம் துடிப்பதில்லை,


காரணம் தெரியாமல் கைக்கோர்த்து கலந்து விட்டோம், இனிமேல் 
காரணம் தெரிந்தாலும் உன் கையை விடப்போவதில்லை,


இன்று ஏன் சொல்கிறேன் தெரியுமா,
உன் பிறந்த நாளுக்கான பரிசாய் என் வார்த்தைகளை வைத்துக்கொள்,


கற்பு பெண்ணுக்கு மட்டும் சொந்தமல்ல,
நம்மை போன்ற நண்பர்களுக்கும் தான்,
அதை கலங்கப்படாமல் பார்த்துக்கொள்வோம்,


என்றும் உன்னோடு - நான்!!!!

No comments:

Post a Comment