ஆயிரம் கதை சொல்லி வளர்த்த அன்னையை பற்றி எழுதவா??? அன்பின் இலக்கணமாய் இருந்து என்னை வளர்த்த தந்தையை பற்றி எழுதவா??? எனக்கு அம்மாவை இருந்து என்னை ஆளாக்கிய அக்காவை பற்றி எழுதவா??? இடையில் வந்து, என் இறுதி ஊர்வலத்தில் இருக்க போகும் நண்பர்களை பற்றி எழுதவா??? தவறு என்று தெரிந்தும் நான் செய்த தவறான என் காதலை பற்றி எழுதவா??? ஆயினும் எழுதுகிறேன், என்னை யார் என்று தெரிந்துக்கொள்ள.... தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையேல், என்னை பின்தொடருங்கள்.........தெரிந்துக்கொள்ள
Wednesday, August 25, 2010
Monday, August 9, 2010
வழிந்தோடும் வாலிப கனவு
இரவு பத்து மணி,
புறம் எங்கும் கருமை சூழ்ந்திருக்க,
கண் இமைகள் கருவிழியை மூட,
மறு நொடி,
அகத்தினுள் கேட்டது காக்கையின் காலை வணக்கம்,
மரக்கிளைகளின் நடுவே சூரியன் எட்டி பார்க்க,
தலை முடியை கோதி காபி கொடுத்தால் என்னவள்,
கொடுத்தவளை கட்டியணைத்து காதல் ரசம் புரிந்த வேளையில்,
மறுபடியும் யாரோ தலையை கோத,
விளித்து பார்த்தால் அம்மா,
நிஜமான காபியை குடித்து விட்டு தூக்கம் கலைந்தேன்.
சிறிய புன்னகையோடு!!!

Sunday, August 8, 2010
Saturday, August 7, 2010
Subscribe to:
Posts (Atom)